தனுஷ் ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் இடம்பிடித்த ஓம் படத்தின் அலாக்கா லூவா பாடல்!

 
Alaakaa Loova

நடிகர் தனுஷ் இன்று (ஜூலை 28-ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர்.

தனுஷ் தன்னுடைய ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் தான் நடித்து வரும் புதிய படமான 'ஓம்'-ன் முதல் சிங்கிள் ட்ராக் 'அலாக்கா லூவா'-வை ரிலீஸ் செய்துள்ளார்.

சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்பாடல் தனுஷ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன், அவர்களுடைய ப்ளேலிஸ்ட்டிலும் இடம்பிடித்துள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் இந்த படத்தில் சாய் பல்லவி, மம்மூட்டி, ஶ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்தனுஷ்.

From Around the web