எதிர்பார்ப்பை எகிற வைத்த தனுஷின் 'ஓம்' படத்தின் FIRST STRIKE!
'கர' படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் ரெடியாகிக் கொண்டிருக்கும் படம் தான் 'D55'. 'ரங்கூன், அமரன்' படங்களின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது.
இதில் மலையாள 'மெகா ஸ்டார்' மம்மூட்டி மிக முக்கிய ரோலில் வலம் வரப்போகிறார். மேலும், சாய் பல்லவி, ஸ்ரீலீலா என டபுள் ஹீரோயின்ஸ் நடித்து கொண்டிருக்கிறார்கள்.
சாய் அபயங்கர் இசையமைத்து வரும் இதற்கு எழில் அரசன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது, இந்த படத்துக்கு 'ஓம்' என டைட்டில் வைத்துள்ளதாக அறிவித்ததுடன், இதன் FIRST STRIKE-ஐயும் ரிலீஸ் செய்துள்ளனர்.
இந்த FIRST STRIKE ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
Striking strong with the First Look poster of #OM 🔥
— Wunderbar Films (@wunderbarfilms) June 18, 2026
▶️ https://t.co/TLHU77gT59
A roaring ride awaits you in theatres, on October 16.@dhanushkraja @mammukka @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Sai_Pallavi92 @sreeleela14 @SaiAbhyankkar @Shra2309 @azy905 @theSreyas… pic.twitter.com/FA4U7odiqc
