தனுஷின் ஓம் படத்துக்கு என்ன சென்சார் சான்றிதழ் தெரியுமா?..

 
om

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், படக்குழு தற்போது புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதையும் அறிவித்துள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ஓ.ம் படம் தனுஷின் 55வது படமாகும். இதில் நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ் ரகசியக் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.  

om

சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. மேலும், இப்படம் வரும் நவம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

CR  Desk
CR Desk

7930 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web