ரஜினியுடன் மோத தயாராகும் தனுஷ்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே. அவரது படங்கள் வெளியானால் அது திருவிழாவாகத்தான் இருக்கும். முதல் ஒரு வாரத்திலேயே மிகப்பெரிய கலெக்சனை பார்த்துவிடுவார்கள் படம் எடுத்தவர்கள்.
ரஜினி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் ஜெயிலர் 2. ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து ரஜினி நடிக்கும் இந்த படத்தையும் நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற அக்ர்டோபர் 14ம் தேதி வெளியாக உள்ளது. பொதுவாகவே ரஜினி, விஜய் படங்கள் வந்தால் மற்ற படங்கள் ஒதுங்கிக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை அந்த போட்டியில் தனுஷ் இணைந்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் ராஜ் குமார் பெரிய சாமி இயக்கி வரும் படம் ஓம். சாய் பல்லவி, ஸ்ரீலீலா , மம்முட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தீபாவளி வெளியீடாக வர இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தம்படி அக்டோபர் 15ம் தேதி வெளியிட வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. ஆனால் அதில் விருப்பம் இல்லாத தனுஷ் இது குறித்து ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
