தனுஷின் 'ஓம்' படத்தின் முக்கிய அப்டேட்டை கொடுத்த தயாரிப்பு தரப்பு!

 
Dhanush om

தனுஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் 'ஓம்', இயக்குநர் மாரி செல்வராஜின் 'D56', வெற்றிமாறனின் 'வடசென்னை 2', 'தமிழ் முருகன்' என அடுத்தடுத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் 'ஓம்' படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில், படத்தை இயக்குவது நம்ம சிவகார்த்திகேயனின் 'அமரன்' இயக்குநராச்சே.

'ஓம்' படத்தில் தனுஷுடன் சேர்ந்து மலையாள நடிகர் மம்மூட்டி, ஹிந்தி நடிகர் நசீருதின் ஷா, மலையாள நடிகை சாய் பல்லவி, தெலுங்கு நடிகை ஶ்ரீலீலா ஆகியோர் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

Dhanush om sai pallavi sreeleela

இந்த படத்துக்கு 'கருப்பு' புகழ் சாய் அபயங்கர் தான் இசையமைக்கிறார். தற்போது, இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் மலேசியாவில் துவங்கியுள்ளதாக படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஸ்ரேயாஸ் இன்ஸ்டாகிராமில் அறிவித்திருக்கிறார். படத்தை வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.

From Around the web