அமரன் பட இயக்குநர்!.. அடுத்து சிவகார்த்திகேயனின் ‘மாவீரா’ தனுஷ் ஒரு முடிவோடத்தான் இருக்காரு!..

 
dhanush

நடிகர் தனுஷின் புதிய படம் D55 என்ற பெயரில் அறியப்பட்ட நிலையில் நேற்று  அப்படத்திற்கு ‘ஓம்’ என தலைப்பு  அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர் மற்றும் முன்னோட்ட காட்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று இப்படத்தின் தீம் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படம், ஆக்‌ஷன்-த்ரில்லராக உருவாகி வருகிறது. அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த படைப்பு என்பதால், இந்த திரைப்படத்திற்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. மேலும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி,  இந்த கூட்டணி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், மாரி 2 படத்திற்குப் பிறகு நடிகை சாய் பல்லவி மீண்டும் தனுஷுடன் இணைந்துள்ளார். இப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இளம் நடிகை ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் இசையை இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் அமைத்துள்ளார்.  அதில் முதல் முக்கிய வெளியீடாக இன்று வெளியாகும் ‘மாவீரா’ தீம் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் ஃபில்ம் மற்றும் ஆர் டாங் ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வரும் ‘ஓம்’ திரைப்படம், மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

மேலும், ஓம் திரைப்படம், 2026 அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்று வெளியாகும் ‘மாவீரா’ தீம் பாடல், ‘ஓம்’ திரைப்படத்தின் உலகிற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் முதல் இசை அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் அமரன் பட இயக்குநரை ஆட்டையை போட்ட தனுஷ் தற்போது மாவீரன் என சிவகார்த்திகேயனின் படத்தின் தலைப்பில் உருவாகும் ‘மாவீரா” பாடலையும் ஆட்டையைப் போட்டுள்ளாரே என எஸ்கே ரசிகர்கள் கலாய்க்கின்றனர். மாவீரன் டைட்டிலே அவரோட மாமா ரஜினியோடது தான் என தனுஷ் ரசிகர்கள் முட்டுக் கொடுக்கின்றனர்.

Tags

From Around the web