பத்ம பூசண் விருது... தனுஷின் 'ஓம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய மம்மூட்டி!
தனுஷ் நடிப்பில் ரெடியாகி வரும் புதிய படம் 'ஓம்' சேப்டர் 1. இதில் மலையாள 'மெகா ஸ்டார்' மம்மூட்டி மிக முக்கிய ரோலில் வலம் வரப்போகிறாராம்.
'ரங்கூன், அமரன்' படங்களின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா என டபுள் ஹீரோயின்ஸ் நடித்து கொண்டிருக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார், எழில் அரசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில், நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. தற்போது, 'ஓம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் மற்றும் படக்குழுவினர் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததுடன், கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.
Celebrating with the legend on the sets ⭐@dhanushkraja and team #OM congratulated Megastar @mammukka for his Padma Bhushan award, on the sets.@Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Sai_Pallavi92 @sreeleela14 @SaiAbhyankkar @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr… pic.twitter.com/GJCnVF0w2A
— Wunderbar Films (@wunderbarfilms) June 25, 2026
