ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டு வெளியானது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், பொங்கலுக்கு வரும் என தள்ளிப்போனது.
பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வெளியான நிலையில், லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப்போனது. பிப்ரவரி மாதம் படம் வெளியான நிலையில் அந்த படம் பெரிதாக ஓடவில்லை.
இதையும் படிங்க: ஒரே அறையில் லேடி சூப்பர் ஸ்டாரான பெண் காவலர்!.. தலைவி பட நடிகைக்கு ஒரே அசிங்கமா போச்சு குமாரு!..
தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் திரைப்படம் ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது இந்தியன் 2 படத்தை போல இந்தப் படமும் ஜூலை மாதத்திற்கு தள்ளிப் போய் உள்ளது. அடுத்த வாரம் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் திரைக்கு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் சேதுபதி நடித்துள்ள அந்த படம் புர்ஜ் கலிஃபாவில் இன்று இரவு ஸ்க்ரீன் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ரசிகரை கைநீட்டி அடிக்க முயன்ற கே.எஸ்.ரவிகுமார்… அவ்ளோ கோபமா மனுஷனுக்கு..?
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ராயன் திரைப்படம் வெளியாகும் எனக் கூறுகின்றனர். ஜூலை கடைசி வாரம் தான் அந்த படம் வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியன் 2 படத்துடன் மோதினாலும் தனுஷ் படத்துக்கு மிகப்பெரிய அடி விழும் என்பதால் இன்னமும் ரிலீஸ் தேதி மற்றும் ஆடியோ லாஞ்ச் என எந்த அறிவிப்பையும் தனுஷ் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார்.
குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் படம் வேறலெவலில் மிரட்டும் எனக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ரஜினியை பந்தயமா வச்சு ரேஸில் குதிக்க போகும் தயாரிப்பு நிறுவனங்கள்! தலைவர் கைவசம் இத்தனை படங்களா?
Vijay TVK:…
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…