Categories: Cinema News latest news throwback stories

விஜய் சேதுபதி, எஸ்.கே எதிர்காலம் இப்படிதான் இருக்கும்… அப்பவே கணித்த தனுஷ்!..

தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் தனுஷ். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை அதனை தொடர்ந்து அவர் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம்தான் அவருக்கு பெரும் வெற்றியை பெற்று தந்தது.

சொல்லப்போனால் காதல் கொண்டேன் திரைப்படம்தான் இயக்குனர் செல்வராகவன், நடிகர் தனுஷ் இருவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதற்குப் பிறகு தனுஷ் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் பெற்றார். தற்சமயம் கேப்டன் மில்லர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு பேட்டியில் தனுஷ் தனது ஆரம்ப கால கஷ்டங்கள் குறித்து பேசும்பொழுது சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பது பற்றி கூறியிருந்தார்.

இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை திரைப்படத்திற்கு பிறகு காதல் கொண்டேன் படத்திற்கான கதையை எழுதினார். நிறைய தயாரிப்பாளர்களை போய் பார்த்தார் ஆனால் காதல் கொண்டேன் திரைப்படத்திற்கு யாரிடமும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.

அப்போது தனுஷ் ஒரு முடிவு எடுத்திருந்தார் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்காத நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் வாய்ப்புகள் பெற்று தர வேண்டும் அதற்காக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்.

தனுஷ் செய்த உதவி:

அப்படி தனுஷ் ஆரம்பித்த நிறுவனம் தான் வொண்டர் பார் பிலிம்ஸ். இதை கூறிய தனுஷ் ”நான் அப்பொழுது சிவகார்த்திகேயன் ஒரு சிறந்த நடிகராக வருவார் என்று நினைத்தேன். சிவகார்த்திகேயன் மூணு திரைப்படத்தில் நடிக்கும் போது அவருடைய தனிப்பட்ட திறமை தெரிந்தது. எனவே அவர் ஹீரோவாக வர வேண்டிய நடிகர். இவருக்கு அதற்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று நினைத்தேன்.

அதேபோல விஜய் சேதுபதியை பார்த்தும் நான் வியந்துப்போனேன். விஜய் சேதுபதி குறுகிய காலத்திலேயே நடிப்பு குறித்து பல ஞானத்தை பெற்றிருந்தார். எனவே அவருக்கு உதவும் வகையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தை நான் தயாரித்தேன். என்னுடைய காலகட்டத்திற்கு அடுத்து தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களாக கண்டிப்பாக சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும்தான் இருப்பார்கள் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் தனுஷ்.

பழைய பேட்டியில் தனுஷ் கூறியது போலவே தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப் பெரும் நடிகர்களாக சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் இருக்கின்றனர்.

 

Rajkumar
Published by
Rajkumar