Categories: Cinema News latest news

இரண்டு கார்த்திக்குகளை நம்பி மோசம் போன தனுஷ்… இனியாவது இப்படி பண்ணாதீங்க தனுஷ்….!

தனுஷ் எப்படிப்பட்ட நடிகர் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். அவர் சிறந்த நடிகர் என்பதற்கு அடையாளமாக இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான பெரும்பாலன படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அவரின் நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது.

ஆனால் சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே சரியான வரவேற்பை பெறவில்லை. அதுமட்டுமின்றி கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் ஓடிடியில் மட்டுமே வெளியானது. ஊரடங்கு முடிந்த பின்னரும் ஏன் தனுஷின் படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் இறுதியாக தனுஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான இரண்டு படங்கள் குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விவாதம் நடத்த தொடங்கி விட்டார்கள். அதன்படி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாறன் ஆகிய இரண்டு படங்களையும் தனுஷ் எப்படி தேர்வு செய்து நடித்தார் என ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன் – நடிகையை ரோட்டில் படுக்க சொன்ன இயக்குனர்.! கடுப்பாகி நானே பண்றேன் என கிளம்பிய வடிவேலு.!

ஏனெனில் தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பது அவரின் நடிப்பில் வெளியான அசுரன் கர்ணன் ஆகிய படங்களின் மூலம் நிரூபித்துள்ளார். இப்படி உள்ள நிலையில் இறுதியாக அவர் நடிப்பில் வெளியான இந்த இரண்டு படங்களுமே அவருக்கு ஏற்ற கதைகளே கிடையாது. அவரின் நடிப்புக்கு இதில் எந்தவொரு ஸ்கோப்பும் இல்லை.

தனுஷ் தேவையில்லாமல் இரண்டு கார்த்திக்குகளை நம்பி தன்னுடைய இமேஜை கெடுத்துக் கொண்டார். கதை தேர்வு, கதாபாத்திர தேர்வு ஆகியவற்றுடன் இயக்குனர்கள் பற்றிய தெளிவும் ஒரு நடிகருக்குத் தேவை என்பதை தனுஷ் புரிந்து கொள்ள வேண்டும் என அவரின் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

Manikandan
Published by
Manikandan