×

தனுஷ் - செல்வராகவன் கூட்டணி உறுதி - பட வேலைகள் ஆரம்பம்!

தனுஷ் - செல்வராகவனின் படம் குறித்த ருசிகர தகவல்

 

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தகரமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். சமீபகாலமாக அவரது படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் அவரிடம் இருந்து ஒரு ஹிட் படத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

தனுஷ் என்ற ஒரு நடிகனை தமிழ் சினிமா ரசிகரக்ளுக்கு அடையாளம் காட்டியதே இயக்குனர் செல்வராகவன் தான். இவர்களது கூட்டணி துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்து புதுப்பேட்டை ,மயக்கம் என்ன , காதல் கொண்டேன் என அனைத்தும் ஹிட் அடித்தது.

மீண்டும் இந்த வெற்றி கூட்டணிக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ் கிடைத்துள்ளது. ஆம் , செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் ப்ரீ புரோடுக்ஷன் வேலைகள் ஆரம்பித்துள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படம்  ஊட்டி , குலுமனாலி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படும் என தகவல்கள் கூறுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News