"பணிந்தவரை விட்டு வைப்பான், பகைத்தவரை நட்டு வைப்பான்"... 'DxV' படத்தில் மீண்டும் இயக்குநர் சீட்டில் அமரப்போகிறாரா தனுஷ்?
கோலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் தனுஷுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் லைன் அப்பில் 'ஓம், வடசென்னை 2', இயக்குநர் மாரி செல்வராஜ் படம் என அடுத்தடுத்து படங்கள் இருக்கிறது.
நேற்று தனுஷ் ஒரு போஸ்டரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த போஸ்டரில் DxV என்று எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த போது தனுஷின் புதிய படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கப்போவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது.
இன்று மறுபடியும் தனுஷ் ஒரு போஸ்டரை ரிலீஸ் செய்ததுடன், "பணிந்தவரை விட்டு வைப்பான், பகைத்தவரை நட்டு வைப்பான்" என்று பதிவிட்டுள்ளார். இது குறித்த விரிவான அறிவிப்பு ஜூலை 10-ஆம் தேதி வருமாம்.
பணிந்தவரை விட்டு வைப்பான்
— Dhanush (@dhanushkraja) July 8, 2026
பகைத்தவரை நட்டு வைப்பான் pic.twitter.com/kPY902r2RZ
தனுஷின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரிக்கையில், இது தனுஷ் இயக்கும் ஐந்தாவது படத்தின் அறிவிப்பு என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே, அவர் 'ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை' ஆகிய 4 படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தனுஷ் இயக்கி, நடிக்கும் இந்த புது படத்துக்கு சாய் அபயங்கர் தான் இசையமைக்கிறாராம்.
