அதர்வா முரளிக்காக தனுஷ் செய்த உதவி!.. இட்லி கடை டூ இதயம் முரளி!.. நீளும் உறவு!..

 
atharva

தமிழ் சினிமாவில் புதிய இயக்குநராக அறிமுகமாகும் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘வாமா வாமா’ என தொடங்கும் இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

விக்னேஷ் சிவனின் துணை இயக்குநராக பணியாற்றிய ஆகாஷ் பாஸ்கரன், தயாரிப்பாளராக ஏற்கனவே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தனுஷ் நடித்த ‘இட்லி கடை’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள அவர், தற்போது ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

‘இட்லி கடை’ படத்தின் போது ஏற்பட்ட நட்பின் காரணமாகவே ‘இதயம் முரளி’ படத்திற்காக தனுஷ் ‘வாமா வாமா’ பாடலை பாடியுள்ளதாக கூறப்படுகிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், முழு பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

காதல் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் நடித்துள்ளனர். மேலும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இவர்களுடன் நட்டி நடராஜன் , ரக்ஷன், நிஹாரிகா என்.எம்., பிரக்யா நாக்ரா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ள நிலையில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். தயாரிப்பாளர், இயக்குநர் என இரட்டை பொறுப்பை ஏற்றுள்ள ஆகாஷ் பாஸ்கரன் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் 2026 ஜூலை 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தனுஷின் குரலில் வெளியான ‘வாமா வாமா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ‘இதயம் முரளி’ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Tags

From Around the web