×

இசைப்புயல் இசையில் பாடும் தனுஷ் – எந்த படத்தில் தெரியுமா?

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

 

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமாக ஆத்ராங்கி டே என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். அந்த படத்தை அவரை வைத்து ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார்.. இந்த படத்தில்  தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அக்ஷ்ய் குமார் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்றது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் ஒரு பாடலை பாடியுள்ளாராம் தனுஷ்.

இது சம்மந்தமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தனுஷ். ஏற்கனவே மரியான் படத்தில் ரஹ்மான் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார் தனுஷ்.

From around the web

Trending Videos

Tamilnadu News