கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் அளவில் பேசப்பட்டு வரக்கூடிய ஒரு விஷயம் என்றால் அது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தான். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அத விடுங்க… இப்பொது தனுஷை பொறுத்தவரை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த புதுப்பேட்டை, காதல் கொண்டேன் ஆகிய 2 படங்களின் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. அடுத்ததாக ‘நானே வருவேன்’ எனவும், தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் செய்திகள் கசிந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
ஆனால், மாறன், திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து நடித்து வந்ததால் தனுஷால் செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. தற்போது ஒருவழியாக அதற்கான நேரம் தனுஷுக்கு வாய்த்துள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இதற்கிடையில், நடிகர் தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. தற்போது அது உறுதியாகியுள்ளது. தெலுங்கு தமிழ் என 2 மொழிகளில் வெளியாகும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். நாக வம்சிஸ் மற்றும் சாய் சௌஜன்யா என இருவரும் தயாரிக்கவுள்ளனர். இப்படத்திற்கு “வாத்தி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது
அந்த வகையில், மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படி, ஒவ்வொரு படமாக மாறிமாறி நடிக்கவுள்ளதாக தனுஷ் முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- பார்ட்-2 எடுக்கும் விஜய் சேதுபதி.! ‘இப்போயாவது அத செய்யுங்கள்’ கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்.!
தற்போது, தனுஷ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும், வாத்தி படத்தில் நடிப்பதற்கு தனுஷ் ஹைதராபாத்தில் இருப்பதாககூறப்படுகிறது. இந்நிலையில், தனுஷ் பட விடுமுறைக்கு கூட சென்னைக்கு வருகை தருவது கிடையாதாம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…