Categories: Cinema News latest news

வசமாக சிக்கி கொண்ட தனுஷ்.. வச்சி செய்யும் நெட்டிசன்கள்… திருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணும் சார்….

பொதுவாக ஒரு திரைப்படங்களின் போஸ்டர்கள் வெளியானால் நெட்டிசன்கள் அந்த போஸ்டரை இந்த படத்தினுடைய காப்பி என்று கூறி வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள “திருச்சிற்றம்பலம்” படத்திற்கான புதிய போஸ்டர் ஒன்று நேற்று வெளியானது.

ஆம், படத்தின் மூன்றாவது பாடலுக்கான அந்த போஸ்டர் மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால், போஸ்டரில் தனுஷ் வித விதமான பல லுக்கில் இருந்தார். மிகவும் கலர்ஃபுல்லாக பல டிசைன்களுடன் இருந்ததால் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆனது.

இதையும் படியுங்களேன்- நம்ம மொட்டை ராஜேந்திரன் எங்கபா ஆளையே காணோம்.. அவரின் பரிதாப நிலை இதோ…

இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் பலர், இது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஓகே ஹே சினாமிகா படத்தின் போஸ்டர் ஒன்றையும் ஒப்பிட்டு இதனுடைய காப்பி தான் திருச்சிற்றம்பலம் போஸ்டர் என தெரிவித்து வந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரி இருந்ததால், இதைப்போல விமர்சனங்கள் எழுந்தது.

இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள், இது ஒன்னும் புதுசு இல்லை, வழக்கம் போல எல்லா படத்திற்கும் இப்படி தான் விமர்சனங்கள் வருகிறது என்பது போல தெரிவித்து வருகிறார்கள். திருச்சிற்றம்பலம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan