கோலிவுட்டை டீலில் விட்டு அமெரிக்கா பறக்கும் தனுஷ்... காரணம் நீங்க நினைக்கிறது இல்ல!
நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் தி கிரேமேன் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்குக்காக தனுஷ், வரும் 9-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு 2 மாதங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கிறது.
Sat, 6 Feb 2021

கார்திக் நரேன் இயக்கும் படத்தின் ஷூட்டிங் 8-ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், அமெரிக்கா செல்ல 9-ம் தேதி நாள் குறித்திருக்கிறார் தனுஷ். தனுஷ், மாளவிகா மோகனன் நடித்துவரும் இந்தப் படத்தில் முதல் ஷெட்யூல் முடிவுக்கு வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத அந்தப் படம் #D43 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இதையடுத்து, இரட்டை இயக்குனர்களான ஆண்டனி மற்றும் ஜோ ரஸ்ஸோ இயக்கும் தி கிரேமேன் படப்பிடிப்பில் தனுஷ் கலந்துகொள்கிறார். அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய இவர்களின் கிரேமேன் படம் எழுத்தாளர் மார்க் கிரேனியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. ஆக்ஷன் அட்வெஞ்சர் நிறைந்த இந்தப் படத்தில் கிறிஸ் ஈவான்ஸ் நடிக்கிறார். இதில், தனுஷின் கதாபாத்திரம் குறித்து படக்குழுவினர் ரகசியம் காக்கிறார்கள்.