DxV என்ற போஸ்டரை வெளியிட்ட தனுஷ்... இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணியா?

 
DxV Dhanush Venkat Prabhu

'கர' படத்துக்கு பிறகு தனுஷ் நடிப்பில் ஜெட் ஸ்பீடில் உருவாகி வரும் படம் 'ஓம்'. இதை முடித்ததும் அடுத்தடுத்து இவரை வைத்து படம் பண்ண பல இயக்குநர்கள் வரிசையில் இருக்கிறார்கள். 

இதில் சில படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வந்துவிட்டது. இந்நிலையில், இன்று தனுஷ் ஒரு புதிய போஸ்டரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் DxV என்று எழுதப்பட்டிருக்கிறது. இதை பார்க்கையில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் தனுஷ் கூட்டணி அமைக்கப்போவது உறுதி என்று சொல்லப்படுகிறது.

இதே போஸ்டரை இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் ஷேர் செய்திருக்கிறார். அதனால் படத்துக்கு இசை அவராக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இது குறித்த விரிவான அறிவிப்பு ஜூலை 10-ஆம் தேதி வெளியாகுமாம்.

.

From Around the web