1. Home
  2. Latest News

Dhanush: பத்திரிக்கையாளர்களை பார்க்க கூச்சப்பட்டு ஒளிந்த தனுஷ்! ஆனால் இன்னைக்கு?

dhanush
இந்த மாதிரி பல்வேறு காரணங்களால் தான் தனுஷ் பிளான் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்

தனுஷ்:

தனுஷை பாலிவுட்டுக்கு தாரை வார்த்து கொடுத்த மாதிரி அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவருடைய நடிப்பில் தேரே இஸ்க் மெயின் என்ற திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. படம் வெளியாகி ஐந்து நாட்களில் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக சொல்லப்பட்டது. காதல் ரொமான்டிக் திரைப்படமாக வெளியான இந்த படம் ஹிந்தி திரை உலகில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது .ஒரு பக்கம் பாலிவுட்டிலும் தன்னுடைய இடத்தை தக்க வைத்து வருகிறார் தனுஷ் .

இன்னொரு பக்கம் தமிழில் யாரும் தொட முடியாத இடத்தை நோக்கியும் சென்று கொண்டிருக்கின்றார். நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக என பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக தனுஷின் வளர்ச்சி அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை வரவழைத்து இருக்கிறது. ரஜினி கமல் விஜய் அஜித் என ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி ஒரு போட்டி இருந்தாலும் தன்னுடைய இலக்கை நோக்கி அவர் நகர்ந்து கொண்டே இருக்கிறார். அதனால் தான் தொடர்ந்து அவர் வெற்றிவாகை சூட முடிகிறது. இவருடைய இந்த வளர்ச்சியை பற்றி வலைப்பேச்சு பிஸ்மி குறிப்பிடும் பொழுது, ஒரு காலகட்டத்தில் பத்திரிகையாளர்களை பார்க்க கூச்சப்பட்டு ஓடி ஒளிந்தவர் தான் தனுஷ்.

கூனி குறுகி வந்த தனுஷ்:

 அது எனக்கு நன்றாக தெரியும். துள்ளுவதோ இளமை படத்தின் போது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அவர்களை பார்த்ததும் சுவருக்கு பின்னாடி ஒளிந்து கொண்டார் தனுஷ். ஏனெனில் நாம் ஹீரோ என்று சொன்னால் இவர்களெல்லாம் எந்த மாதிரி கிண்டல் பண்ணுவார்களோ என்ற எண்ணத்தில் பத்திரிக்கையாளர்களை பார்க்கவே கூச்சப்பட்டு கொண்டு சுவரை பார்த்து திரும்பிக் கொண்டிருந்தார். நானும் இன்னொரு பத்திரிகையாளர்களும் டீ சாப்பிட வெளியில் வந்தோம். எதிரே கஸ்தூரிராஜா நின்று கொண்டிருந்தார். என்னுடன் வந்த இன்னொரு பத்திரிக்கையாளர், என்ன கஸ்தூரிராஜா உன்னுடைய மகன்தான் ஹீரோவா என கேட்டார்.

dhanuhs

ஆமாண்ணே இதோ நிற்கிறான் எனக் கூறி பிரபு இங்க வா என அழைத்து எங்கள் முன் தனுஷை நிற்கச் சொன்னார். தனுஷ் அங்கிருந்து வரும்பொழுது கூனி குறுகி கூச்சப்பட்டு கொண்டுதான் வந்தார். அந்தக் காலகட்டத்தில் இருந்து தனுஷை நான் பார்த்து வருகிறேன். அப்படி இருந்த தனுஷ் ட்ரீம்ஸ் என்ற ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக வருகிறார். முதல் படத்தில் எங்களை எல்லாம் பார்க்க கூச்சப்பட்டு கொண்டிருந்த தனுஷ் இந்த படத்தின் ப்ரோமோஷனில் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு தலையில் தொப்பியையும் போட்டுக்கொண்டு கூலிங் கிளாஸும் போட்டுக் கொண்டு ஒரு ஹீரோவாக கெத்தாக வந்தார்.

முன்னுதாரணமாக இருக்கிறார்;

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அப்படி இருந்த தனுஷ் இன்று இவ்வளவு உயரத்தில் இருக்கிறார் என்றால் அது அதிர்ஷ்டத்தில் விளைந்தது கிடையாது. அதற்கு பின்னால் அவருடைய மிகப்பெரிய உழைப்பும் திறமையும் தான் காரணம். எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய டெடிகேஷன் அது ரொம்ப முக்கியம். ஏனெனில் அவர் வயதை ஒத்த பல ஹீரோக்கள் சினிமா நடிகன் என்ற ஒரு லேபிளை தான் அவர்கள் என்ஜாய் பண்ணுகிறார்கள். நான் நடிகன்டா ,அந்த நடிகன் என்ற பெயரை வைத்து என்னெல்லாம் சாதிக்க முடியுமோ அதில் தான் அவர்களின் கவனம் இருக்கிறது.

இந்த அந்தஸ்தை வைத்து நாம் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே கிடையாது. இப்போது போர் தொழில் டைரக்டருடன் ஒரு படம் நடித்தார். அந்தப் படத்தில்  நடிக்கும் போதே ஒரு வார காலத்தில் ராஜ்குமார் பெரியசாமி படத்திற்கு டேட் கொடுக்கிறார். இந்த படத்தில் ஏதாவது சிக்கல் வந்தால் இன்னொரு படத்தில் நடிக்கவும் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். அந்த அளவுக்கு பக்காவாக பிளான் செய்து தன்னுடைய லைன் அப்புகளை ஒதுக்கி வருகிறார். அப்படிப்பட்ட உழைப்புக்கு கிடைத்த இடம் தான் இன்று அவருடைய வளர்ச்சி.

பேன் இந்தியா ஸ்டார்:

அதுவும் பேன் இந்தியா என்ற ஒரு கல்ச்சர் உருவாகி வருகிறது. அது சினிமா துறையில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதனால் வெறுமனே தமிழில் மட்டும் நடிக்காமல் தெலுங்கு ஹிந்தி என பிற மொழிகளிலும் நடித்து அங்குள்ள ரசிகர்களுக்கும் ஒரு பரிச்சயமானவனாக மாறினால் தான் நடிக்கிற எல்லா படத்தையும் ஒரு ஃபேன் இந்தியா படமாக கொண்டு போக முடியும். அதன் மூலமாக நாமளும் அந்த ரசிகர்களிடம் போய் சேரலாம். அதன் மூலம் நம்முடைய வருமானமும் பல மடங்கு அதிகரிக்கும் .இந்த மாதிரி பல்வேறு காரணங்களால் தான் தனுஷ் பிளான் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார் என பிஸ்மி தெரிவித்துள்ளார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.