×

படிக்க வைக்காமல் கட்டாயப்படுத்திய கஸ்தூரி ராஜா... கோபத்தில் தனுஷ்

தனுஷ் முதன் முதலில் நடிக்க வந்தபோது அவர் தன் தந்தை மீது செம கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.
 
படிக்க வைக்காமல் கட்டாயப்படுத்திய கஸ்தூரி ராஜா... கோபத்தில் தனுஷ்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார் நடிகர் தனுஷ். இவர் தன் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். படம் செம வரவேற்பை பெற்றாலும், தனுஷின் தோற்றம் குறித்து பலரும் விமர்சனம் கிளப்பினர். அப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் திரைப்படத்தில் தனுஷ் நடித்தார். அப்படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. 

இந்நிலையில், தனுஷ் தனது காதல் கொண்டேன் படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு நிகழ்வால் தந்தை கஸ்தூரி ராஜா மீது கோபமாக இருந்து இருக்கிறார்.  படப்பிடிப்புக்கு வந்த ரசிகர்கள் தனுஷிடம் இப்படத்தின் நாயகன் யார் எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு தனுஷ், இன்னொரு நாயகனான சுதீப்பை காட்டி இருக்கிறார். அவர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். தொடர்ந்து, உதவி இயக்குனர் ஒருவரிடம் இப்படத்தின் நாயகன் யார் என சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அவர் தனுஷை கைகாட்டியதும், அங்கிருந்தவர்கள் சிரித்து விட்டனராம். இது தனுஷிற்கு பெரிய கவலையை கொடுத்திருக்கிறது. தன்னை படிக்க வைக்காமல் கட்டாயப்படுத்தி நடிக்க அனுப்பிய தந்தை மீது கடும் கோபத்தில் இருந்தாராம். ஆனால், அப்படம் வெற்றி பெற்று பலருக்கும் தனுஷ் தன்னை நிரூபித்துவிட்டார் என்றே சொல்லலாம்.  

From around the web

Trending Videos

Tamilnadu News