வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'தமிழ் முருகன்'... வெளியானது ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ!

 
Dhanush Thamizh Murugan

நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் கடந்த 3 நாட்களாக DxV என்று எழுதப்பட்ட போஸ்டர்களை வெளியிட்ட வண்ணமிருந்தார். ரசிகர்களும் தனுஷ் அடுத்து எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்று ஆலவலுடன் இருந்தனர்.

தற்போது, இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தான் இயக்கப்போகிறாராம். ஏற்கனவே, வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை, ஆடுகளம், பொல்லாதவன்' ஆகிய படங்களில் நம்ம D நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு 'தமிழ் முருகன்' என டைட்டில் வைத்துள்ளனர். இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோவையும் ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

From Around the web