1. Home
  2. Latest News

Vada Chennai2: திடீரென மீட்டிங் போட்ட வடசென்னை 2 டீம்!.. என்னமோ நடக்குது!..

Vada Chennai2: திடீரென மீட்டிங் போட்ட வடசென்னை 2 டீம்!.. என்னமோ நடக்குது!..

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2018ம் வருடம் வெளியான திரைப்படம்தான் வடசென்னை. இந்த படத்தில் அமீர், ஆண்ட்ரியா சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மேலும் டேனியல் பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை, காதல், கேங்ஸ்டர் பின்னணி ஆகியவற்றை இப்படம் பேசியது.

இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் படம் வெற்றி பெற்றது. எனவே ‘வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது எடுப்பீர்கள்?’ என்கிற கேள்வி கடந்த ஏழு வருடங்களாக வெற்றிமாறனை துரத்தி வருகிறது. ஆனால் என்ன காரணமோ வடசென்னை படத்தை வெற்றிமாறன் இதுவரை எடுக்கவில்லை. அதேநேரம் கண்டிப்பாக 2026ம் வருடம் இந்த படத்தை துவங்குவோம் என தனுஷ் ரசிகர்களிடம் வெற்றிமாறன் உறுதி செய்திருக்கிறார். இட்லி கடை பட புரமோஷன் விழாவிலும் வட சென்னை 2 படம் 2026-ல் வரும் என தனுஷும் சொல்லி இருக்கிறார். எனவே அவர் ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஒருபக்கம் வட சென்னை பட கதை தொடர்பான ஒரு கதையை எழுதி அந்த படத்தை சிம்புவை வைத்து எடுக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இறங்கியிருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பது துவங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு அரசன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.

Vada Chennai2: திடீரென மீட்டிங் போட்ட வடசென்னை 2 டீம்!.. என்னமோ நடக்குது!..

இந்நிலையில் வடசென்னை 2 படத்தின் தயாரிப்பாளர் என சொல்லப்படும் ஐசரி கணேசன், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய மூவரும் திடீரென சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. எனவே வடசென்னை 2 படம் விரைவில் டேக் ஆப் ஆகுமா என்கிற எதிர்பார்ப்பு தனுஷ் ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. ஆனால் இவர்கள் மூவரும் சந்தித்துக் கொண்டதன் பின்னணி வேறு.

ஐசரி கணேசனின் வேல்ஸ் நிறுவனம் பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பல கல்வி நிலையங்கள் இருக்கிறது. ஒரு பக்கம் சினிமாவிலும் ஐசரி தயாரிப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் என்கிற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனம் தயாரிப்பாளர்களிடமிருந்து பாடல்களின் உரிமையை வாங்கிக் கொள்ளும் ஆடியோ நிறுவனமாக செயல்படும். இது தொடர்பான துவக்க விழாவில்தான் தனுஷும், வெற்றிமாறனும் கலந்துகொண்டனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.