தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறார். மேலும் படத்தின் முதல் இரண்டு சிங்கிள்களும் வெளியான நிலையில் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
மேலும் தமிழ் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் நடித்து தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளார். இவர் நடித்து நாளை வெளியாக இருக்கும் ஹாலிவுட் படம் தி கிரே மேன். இந்த படத்தில் தனுஷிற்கு படத்தின் திருப்பு முனையாக இருக்கும் கதாபாத்திரம் என்பதால் இந்த படத்திற்கு பிறகு ஹாலிவுட்டிலும் தனுஷின் புகழ் பாடும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில் படத்தின் புரோமோஷன் வெளி நாடுகளில் நடந்து கொண்டிருப்பதால் தவறாது எல்லா இடங்களுக்கும் தனுஷ் சென்று புரோமோஷனில் கலந்து கொண்டு உரையாடி வருகிறார்.
மேலும் நேற்று நடந்து புரோமோஷனில் கூட தன் இரு மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவை தன்னுடன் அழைத்து சென்றிருக்கிறார் தனுஷ். புகைப்படங்கள் எடுக்கும் போது மகன்களையும் அழைத்து பக்கத்தில் நிற்க வைத்து புகைப்படங்கள் எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ இதோ: https://twitter.com/raajstr686/status/1547451794045140992?s=20&t=LfhBkTi_uzqMSUy8ugLZEA
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…