மீண்டும் வேகமெடுக்கும் இளையராஜா பயோபிக்.. ஆனா தனுஷ் இல்ல.. அதிரடியாக நடந்த மாற்றம்

இளையராஜா பயோபிக்: சினிமாவில் சமீப காலமாக பயோபிக் என்ற பெயரில் பல்வேறு சாதனைகளை புரிந்த பல பேரின் வாழ்க்கை கதைகளை அப்படியே படமாக எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை அமரன் என்ற தலைப்பில் ராஜ்குமார் பெரியசாமி படமாக அதை இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் சாய்பல்லவி ஆகியோரின் நடிப்பில் படம் பெரிய ஹிட் ஆனது.
பரபரப்பாக பேசப்பட்ட செய்தி: அதேபோல் இசைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தவர் இளையராஜா. அவருடைய வாழ்க்கை கதையை படமாக எடுக்கும் முயற்சியில் தனுஷ் அதில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவதாகவும் அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இளையராஜாவின் பயோபிக் பற்றிய செய்திதான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
டிராப்: சொல்லப்போனால் ராயன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் திரைப்படமாக இந்த இளையராஜா பயோபிக் தான் இருந்தது. ஆனால் இடையில் சில தடங்கல்கள் சில மாற்றங்கள் இவைகளினால் அந்த படம் அப்படியே நின்று போனது .ஒரு தரப்பு இந்த படம் அப்படியே டிராப் ஆகிவிட்டது என்றும் கூறினார்கள். ஆனால் மீண்டும் அந்த படத்தை எடுக்கும் முயற்சியில் படக்குழு ஆர்வம் காட்டி வருகிறது.
வெளியேறிய தனுஷ் நிறுவனம்: இதில் சின்ன மாற்றம் என்னவெனில் ஆரம்பத்தில் இளையராஜா பயோபிக்கை கனெக்ட் மீடியா என்ற நிறுவனத்துடன் தனுஷின் நிறுவனமும் தயாரிப்பதாக தான் இருந்தது. ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்து தனுஷின் உண்டர்பார் நிறுவனம் விலகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கு பதிலாக ஏஜிஎஸ் நிறுவனம் கனெக்ட் மீடியா நிறுவனத்துடன் இளையராஜாவின் பயோபிக்கை தயாரிக்கப் போவதாக சொல்லப்படுகிறது .
ஆனால் தனுஷ் இந்த படத்தில் இளையராஜாவாக நடிக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதற்கிடையில் இளையராஜாவின் பயோ பிக் எடுப்பதற்கு காலதாமதம் ஆனதனால் அருண் மாதேஸ்வரன் ஹிந்தியில் ஒரு படத்தை எடுக்க போய்விட்டார். இருந்தாலும் இளையராஜாவின் பயோபிக் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாக இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்பதால் ஹிந்தி படத்தை முடித்துவிட்டு அருண் மாதேஸ்வரன் மீண்டும் இந்த படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதனால் இளையராஜாவின் பயோபிக் கண்டிப்பாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது.