Categories: Cinema News latest news

தயவு செஞ்சி என்ன தொந்தரவு பண்ணாதீங்க.! தனுஷ் எடுத்த அதிரடி முடிவு.?

நடிகர் தனுஷ் தனது அடுத்த அடுத்த படங்களில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகிறது. சில வாரங்களுக்கு முன்பு, தனுஷின் புதிய படமான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படம், ஒரு ஆக்சன் திரைப்படம் என்பதால் ஒரு பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.

தற்போது, ‘கேப்டன் மில்லர்’ படம் குறித்த சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், இப்படம் முடியும் வரை அடுத்த நான்கு மாதம் வேறு எந்தப் படத்திலும் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் படங்களை மட்டும் ஒப்பந்தம் செய்ய தனுஷ் முடிவு செய்துள்ளதாக  கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் தனுஷ் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம், தற்போது படக்குழு பிரமாண்ட செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன், படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என்றும் பல ஷெட்யூல் இடைவெளிகளுடன் படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்களேன் – வேலை முடிந்ததும் சகோதரி என சொல்லிடுவார்.. பலே கில்லாடி நம்ம சியான்.! பிரபல நடிகை ஓபன் டாக்…

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Manikandan
Published by
Manikandan