Categories: Cinema News latest news

என்ன வாத்தி இதெல்லாம்.?! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்… வருத்தத்தில் தனுஷ் ரசிகர்கள்.!

நடிகர் தனுஷின் பிறந்தநாளான இன்று, அவரது வெளிவரவிருக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி படமான ‘வாத்தி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இந்த படத்தில் தனுஷ் கல்லூரி ஆசிரியராக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க, வில்லனாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் எஸ் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிருக்கும் இப்படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ‘சர்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது, இப்படத்தின் டிரெய்லரில் கல்வி ஒரு வியாபாரமாக விற்கப்படும் முறைக்கு எதிராக தனுஷ் எவ்வாறு போராடுகிறார் என்பதை எடுத்துரைக்கிறது. கல்லூரி ஆசிரியராக நடித்து இருக்கும் தனுஷின் நடிப்பு மிகவும் வரவேற்பு பெற்று வருகிறது.

இதையும் படிங்களேன் – வசமாக சிக்கி கொண்ட தனுஷ்.. வச்சி செய்யும் நெட்டிசன்கள்… திருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணும் சார்….

அந்த வகையில், கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராக தனுஷின் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலரின் இறுதியாக தனுஷ் பாரதியார் வேடத்தில் வரும் பஸ் சண்டை காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த பாரதியார் கெட்டப் தனுஷுக்கு சுத்தமாக எடுக்கவில்லை என்று தனுஷ் ரசிகர்களே இணையத்தில் வசைபாடி வருகின்றனர்.

 

Manikandan
Published by
Manikandan