40 கோடி வசூல்!.. அடித்து ஆடிய தனுஷ்!.. நெகட்டிவ் விமர்சனங்கள் எல்லாம் பிரச்னையே இல்லை!..

 
om

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான ஓம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூலை தயாரிப்பு நிருவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. செம்மரக் கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

om

படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.31.55 கோடி வசூல் செய்ததாக  தகவல்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது ரூ.40 கோடியைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

தனுஷ், மம்மூட்டியின் நடிப்பு, சாய் பல்லவியின் ஆக்‌ஷன் மற்றும் சாய் அபயங்கரின் பின்னணி இசை ஆகியவை பாராட்டுகளைப் பெற்றாலும் மறுபக்கம் விறுவிறுப்பான முதல் பாதி மற்றும் நீண்ட இரண்டாம் பாதி என கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும், ரூ.200 கோடியில் உருவான இப்படம் முதல் நாளிலேயே வெரும் 40 கோடியை வசூலித்த நிலையில் ரூ100 கோடியாவது வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2வது நாள் வசூல் சரிவை சந்திக்காமல் இருந்தால் சரி.

CR  Desk
CR Desk

7942 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web