ஓம் படத்தையும் வெற்றிப்பெற வைப்பாரா சாய் பல்லவி?.. ட்ரெய்லர் தரமா இருக்கே!..

 
om

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று 7 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் சில மணி நேரம் தாமதித்து 12 மணிக்கு ஓ.ம் என பெயரில் சிறிய மாற்றத்துடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷுடன், மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சாய் பல்லவி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

om

செம்மரக் கடத்தல் மற்றும் அதனைச் சுற்றி நடப்பதை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஓம் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும், இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகர் தனுஷுக்கு ஓம் படம் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CR  Desk
CR Desk

7917 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web