அமரன் சிவகார்த்திகேயனாக மாறிய சாய் பல்லவி!.. தனுஷின் ஓம் டிரைலர் நாளை ரிலீஸ்!..
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. இதனைப் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளார்.
அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும்,தனுஷ், மம்மூட்டி இணைந்து நடிப்பது இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தனுஷுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நாசர், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.Wunderbar Films மற்றும் RTake Studios நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
#OM New Promo Trailer from tomorrow 🔥 https://t.co/UNEfZxRj1z
— Sekar 𝕏 (@itzSekar) November 12, 2026
முன்னதாக அக்டோபர் 16ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தற்போது நவம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு படத்தை புரமோட் செய்யத் தொடங்கியுள்ளனர். அதில், சாய் பல்லவி ஆக்ஷனில் அதகளம் செய்து அமரன் சிவகார்த்திகேயன் போல நடித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ராமாயணா படத்திலும் சாய் பல்லவி சண்டை போட்ட நிலையில், அடுத்து அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.
