×

இரண்டு வருடங்களுக்கு பின் திருமண புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்-சிம்பு பட நடிகை

தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ சிம்பு நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது 

 

இந்தநிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை ஸ்ரேயா, ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. திருமணத்தை அவர் மறுக்கவில்லை என்றாலும் திருமண புகைப்படத்தை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த திருமண புகைப்படத்தை தற்போது நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் திருமண கோலத்தில் ஸ்ரேயாவும், இந்திய கலாச்சாரத்தின் படி அவருடைய கணவரும் இருக்கும் காட்சி உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் பெரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ரஷ்ய மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டாலும் இந்திய முறைப்படி திருமணம் செய்த ஸ்ரேயாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

View this post on Instagram

Love you forever and ever @andreikoscheev

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on

From around the web

Trending Videos

Tamilnadu News