'தர்மன்' பட ஹீரோயின் சிம்ரனின் அசத்தலான போட்டோஷூட்!
உலகமெங்கும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நம்ம சிம்ரன். ஒரு காலத்தில் கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோஸுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் சிம்ரன்.
கடைசியாக இவர் வில்லியாக நடித்த 'அந்தகன்' மற்றும் ஹீரோயினாக நடித்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' இரண்டுமே ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
தற்போது, சிம்ரன் 'தர்மன்' என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் ஹீரோ யார் தெரியுமா? நம்ம 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் தான். அவருக்கு ஜோடியாக தான் இதில் நடிக்கிறாராம்.
Blue never goes out of style.. 💙😊 pic.twitter.com/MMfq6stq52
— Simran (@SimranbaggaOffc) July 11, 2026
இந்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, 'உலக நாயகன்' கமல்ஹாசன் தயாரித்து வருகிறாராம். இதன் ஷூட்டிங் டாப் கியரில் நடந்து வருகிறது. இந்நிலையில், சிம்ரன் எக்ஸ் தளத்தில் புதிதாக எடுத்த சூப்பரான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.
