×

சுஷாந்த் இல்லாமல் தோனி 2 சாத்தியமில்லை - தயாரிப்பாளர் பளீச்!

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக  நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஞாயிற்று கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாடகம், சின்னத்திரை , மேடை நடனம் என அடித்தளத்தில் இருந்து முயற்சித்து சினிமாவில் நுழைந்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பாலிவுட்டின் நட்சத்திர குடும்பங்கள் ஒன்று கூடி அவரை ஒதுக்கியுள்ளனர்.

 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சாதி செய்து வரை நடிக்கவிடாமல் செய்துள்ளனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 படவாய்ப்புகளை இயந்துள்ளார் சுஷாந்த்.

இந்நிலையில், தோனி  2' படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளார்  அருண் பாண்டே சுஷாந்த் சிங் மரணமடைந்து விட்டதால், அவர் அளவுக்கு அந்த கேரக்டரை உள்வாங்கி நடிப்பதற்கு ஆளே இல்லை அதனால் தோனி 2 படம் எடுக்கும் முடிவை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாலிவுட் காரர்களுக்கு சவுக்கால் அடித்தாற்போல் சொல்லிடீங்க என சுஷாந்த் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News