×

தோனி மீண்டும் விளையாட வாய்ப்பு இல்லை – முன்னாள் கேப்டன் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி !

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இனி சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இனி சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாதக் காலமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள கேள்வி என்னவென்றால் தோனி மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவாரா? மாட்டாரா? என்பதுதான். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதுபோல் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து அவர் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

மேலும் ரவி சாஸ்திரி போன்ற பயிற்சியாளர்களும் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ‘நீண்ட நாட்களாக தோனி ஓய்வில் இருக்கிறார். அப்படி இருக்கையில் அவர் மீண்டும் அணிக்குள் திரும்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விளையாட தகுதியோடு இருக்கிறார்.’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் தோனி ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News