×

12 ஆண்டுகளாக விளையாண்டும் தோனி இவர் பந்தில் ஒரே ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை… மோசமான சாதனை!

சென்னை அணியின் கேப்டன் தோனி கொல்கத்தா அணியின் சுழல் பந்து வீச்சாலர் சுனில் நரேன் பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது இன்று வரை ஒரு சாதனையாக உள்ளது.

 

சென்னை அணியின் கேப்டன் தோனி கொல்கத்தா அணியின் சுழல் பந்து வீச்சாலர் சுனில் நரேன் பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது இன்று வரை ஒரு சாதனையாக உள்ளது.

ஐபிஎல் தொடரின் மிகவும் அச்சுறுத்தக் கூடிய அணிகளில் ஒன்றாக சிஎஸ்கே உள்ளது. அந்த அணியின் கேப்டன் தோனி தான் நினைக்கும் போதெல்லாம் பவுண்டரி அடிக்கும் திறமைக் கொண்டவர் என பாராட்டப்படுபவர். ஆனால் 12 ஆண்டுகாலமா அவர் விளையாடியும் ஒரே ஒரு பவுலரின் பந்தில் ஓரே ஒரு முறை கூட பவுண்டரிகள் அடித்ததில்லை என்ற மோசமான சாதனையை வைத்துள்ளார்.

சுனில் நரேன் இதுவரை தோனிக்கு 59 பந்துகளை வீசியுள்ளார். அதில் தோனி 29 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒருமுறை அவர் பந்தில் அவுட் ஆகியுள்ளார். மேலும் அந்த 29 ரன்களிலும் ஒரு பவுண்டரி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியிலாவது பவுண்டரி அடித்து இந்த மோசமான சாதனையை உடைப்பார் தோனி என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News