×

பேருந்தில் தோனியின் சீட் இன்னும் காலியாக இருக்கிறது – சஹால் நெகிழ்ச்சி !

இந்திய அணி வீரர்கள் செல்லும் பேருந்தில் தோனிக்காக ஒதுக்கப்படும் கடைசி வரிசை ஜன்னலோர சீட் இன்னும் காலியாக இருப்பதாக சுழற்பந்து வீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் செல்லும் பேருந்தில் தோனிக்காக ஒதுக்கப்படும் கடைசி வரிசை ஜன்னலோர சீட் இன்னும் காலியாக இருப்பதாக சுழற்பந்து வீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தற்போது நியுசிலாந்தில் மையம் கொண்டு டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தற்போது ஹேமில்டனில் நடக்கும் அடுத்த போட்டியில் விளையாட அங்கு சென்றுள்ளது.

இதற்காக பேருந்தில் சென்றபோது இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் சஹால், ஒவ்வொரு வீரரிடமும் கேள்விகளை எழுப்பினார். அப்போது பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்று ‘இந்த இடம் எப்போதும் லெஜண்ட் ஒருவருக்காக ஒதுக்கப்படும். தோனிதான் அந்த லெஜண்ட். அவருக்காக ஒதுக்கப்படும் கடைசி ஜன்னல் சீட்டில் இப்போதும் யாரும் உட்காருவதில்லை. அனைவரும் தோனியை மிஸ் செய்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News