மாரி செல்வராஜ் சொன்ன அந்த வார்த்தை!.. புது படத்துக்கு No சொன்ன துருவ் விக்ரம்..
மாரி செல்வராஜ் சொன்ன அந்த வார்த்தை!.. புது படத்துக்கு No சொன்ன துருவ் விக்ரம்..
நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ். அப்பா விக்ரம் சினிமாவில் இருந்ததாலும், அப்பாவின் படங்களை பார்த்து வளர்ந்ததாலும் சின்ன வயதிலிருந்தே துருவுக்கும் சினிமாவின் மீது ஆர்வம் ஏற்பட்டது. விக்ரம் நடித்து ரசிகர்களை ஏமாற்றிய படங்களின் திரைக்கதை பற்றி அப்பாவிடம் துருவ் விவாதிப்பதும் உண்டு. மேலும், நியூயார்க்கில் உள்ள ஒரு நடிப்பு கல்லூரியில் பயிற்சியும் எடுத்திருக்கிறார்.
கதை எழுதுவது, பாடுவது, படம் இயக்குவது இதில் அனைத்திலும் துருவுக்கு ஆர்வம் உண்டு. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழில் வர்மா என்கிற தலைப்பில் இயக்குனர் பாலா இயக்க துருவ் அந்த படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். ஆனால் படம் முடிந்து பார்த்த பின்னர் தயாரிப்பாளருக்கு திருப்தி ஏற்படாததால் அதே கதையை வேறு ஒரு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்கிற தலைப்பில் எடுத்தார்கள். அர்ஜுன் ரெட்டி படத்தை பெரும்பாலானவர்கள் பார்த்துவிட்டதால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்க வில்லை. பாலா இயக்க்கிய வர்மா ஓடிடியில் வெளியானது.
அதன்பின் அப்பா விக்ரமுடன் இணைந்து மகான் என்கிற படத்திலும் துருவ் நடித்தார். அந்த படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள பைசன் படம் வெளியானது. தென் மாவட்டத்தில் வசிக்கும் கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து பைசன் படத்திற்கான கதை, திரைக்கதையை அமைத்திருந்தார் மாரி செல்வராஜ்.
இந்த படத்திற்காக இரண்டு வருடங்களுக்கு மேல் கடுமையான உழைப்பை போட்டு பயிற்சி எடுத்தார் துருவ். படம் வெளியானதும் துருவின் நடிப்பையும், அவரின் உழைப்பையும் பலரும் பாராட்டினார்கள். படமும் ரசிகர்களுக்கு பிடித்துப் போக சில தியேட்டர்களில் 50 நாட்களுக்கு மேலும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 50 கோடிக்கு மேல் வசூலும் செய்தது.

எனவேதான் துருவ் விக்ரம் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் துருவ் ஒரு படத்தில் நடிப்பதாக செய்தி வெளியானாலும் இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்துள்ளது.
3 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றியைப் பெற்ற கில் (Kill) என்கிற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ரத்தம் தெறிக்கும் அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட ஆக்சன் திரைப்படம் இது. இந்த படத்தை பார்த்து நடிக்க ஒப்புக்கொண்டார் துருவ். அதை அவர் மாரி செல்வராஜிடம் சொன்னபோது ‘பைசன் போல ஒரு படத்தில் நடித்துவிட்டு அது போன்ற கதையில் நடிக்காதே’ என்று சொல்லிவிட்டாராம். எனவே கில் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவில்லை என சொல்லிவிட்டாராம் துருவ்.
