கவுதம் மேனனுக்குக் கிடைத்த க்ரீன் சிக்னல்: ரிலீசுக்கு தயாராகும் துருவ நட்சத்திரம்

 
கவுதம் மேனனுக்குக் கிடைத்த க்ரீன் சிக்னல்: ரிலீசுக்கு தயாராகும் துருவ நட்சத்திரம்

சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக திரைக்கு வர முடியாமல் முடங்கிக் கிடக்கும் நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்திற்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.
ஸ்பை-த்ரில்லர் பாணியில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கௌதம் மேனன் முந்தைய படங்களுக்கு வாங்கிய நிதி சுமை இந்த படத்தையும் சேர்த்து பாதித்தது என்று சொல்லப்படுகிறது. அதாவது கௌதம் மேனன் பல்வேறு தரப்பினரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் இந்த படம் வெளியாகாமல் முடங்கி போனது.

இந்த நிலையில் இந்த படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜூன் 15-ஆம் தேதிக்குள் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பங்குதாரராக உள்ள 'கொண்டாடுவோம் என்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் படத்தை வெளியிடலாம் என்று நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

ஒருவேளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால், கூடுதல் அவகாசம் கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். அதேசமயம், படத்தின் வெளியீட்டிற்கு மனுதாரர்களான புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் எந்தவித தடையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

From Around the web