×

திமுகதான் ஜாதி, மதத்தை உரம்போட்டு வளர்க்கிறது – பாஜகவில் இணைந்த துரைசாமி பரபரப்பு பேட்டி!

திமுகவில் பாஜகவில் இணைந்த துரைசாமி திமுக ஜாதியை வளர்ப்பதாக பேசி பரபர்ப்பைக் கிளப்பியுள்ளார்.

 

திமுகவில் பாஜகவில் இணைந்த துரைசாமி திமுக ஜாதியை வளர்ப்பதாக பேசி பரபர்ப்பைக் கிளப்பியுள்ளார்.

திமுக துணைப்பொதுச் செயலாளராக இருந்த வி பி துரைசாமி தமிழக பாஜக தலைவர் எல் முருகனை சந்தித்து வாழ்த்துக் கூறியதில் இருந்து திமுகவில் பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து அவர் பாஜகவில் சேரப்போகிறார் எனப் பேசப்பட்ட நிலையில் நிலையில் அவரது திமுக து.பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று அதிரடியாக எல் முருகனை சந்தித்து பாஜகவில் இணைத்துக்கொண்டார். பின்னர் பேசிய வி.பி.துரைசாமி கூறுகையில், ’திமுக என் பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால்தான் நாட்டை காப்பாற்ற முடியும்ஜாதி மதம் இல்லை என்று சொல்லிவிட்டு அவர்களே அதை உரம்போட்டு வளர்க்கிறார்கள். இந்த நேரத்தில் அண்ணா, பெரியார் இருந்திருந்தால் என் முடிவுக்காக மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு பாஜக தலைவர் பதவி கொடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அருந்ததிய மக்களும் தங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை பார்க்கின்றனர்.’ எனப் பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News