பாக்ஸ் ஆபிஸில் சாதனை: 5 வாரங்களில் ரூ. 1,783 கோடி வசூலைக் குவித்த துரந்தர் 2

 
பாக்ஸ் ஆபிஸில் சாதனை: 5 வாரங்களில் ரூ. 1,783 கோடி வசூலைக் குவித்த துரந்தர் 2

ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான துரந்தர் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் யாருமே எதிர்பாராத மாபெரும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், அக்சய் கண்ணா , சஞ்சய் தத் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த துரந்தர் முதல் பாகம் பாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய ஸ்பை - ஆக்‌ஷன் கதை களத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பான திரைக்கதை, மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அதிரடியான கிளைமேக்ஸ் ஆகியவை இரண்டாம் பாகமான துரந்தர் 2 படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிறச் செய்தது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியே தற்போது இரண்டாம் பாகத்தின் இந்த பிரம்மாண்ட வசூல் சாதனைக்கு மிக முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது எனலாம்.

இதையும் படிங்க: நிஜ உலக சூப்பர் மேன்கள்! – குழந்தைகளை ஆபத்திலிருந்து காக்கும் தந்தையரின் ‘Dad Reflexes’; வியக்க வைக்கும் அறிவியல் பின்னணி!

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான துரந்த்ர் 2 படத்திற்கு முன்பதிவிலேயே சாதனை படைத்தது. இந்திய திரையுலகில் அதிக வசூல் செய்த டாப் திரைப்படங்களின் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. 5 வாரங்கள் ஆன நிலையில் இபடம் உலகளவில் சுமார் ரூ. 1783 கோடி வசூல்செய்துள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது

படக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இப்படத்தின் ஒட்டுமொத்த உலகளாவிய வசூல் நிலவரம் இதோ:

இந்தியாவின் மொத்த வசூல் : ரூ. 1,360 கோடி

இந்திய நெட் வசூல் : ரூ. 1,153 கோடி

வெளிநாட்டு வசூல் : ரூ. 423 கோடி (அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில்)

உலகளாவிய மொத்த வசூல் : ரூ. 1,783 கோடி

ஒட்டுமொத்தமாக இந்திய சினிமாவில், தங்கல் மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்களுக்குப் பிறகு உலகளவில் அதிக வசூல் செய்த படங்களில் முன்னிலை வகித்து துரந்தர் 2 ஒரு புதிய பாக்ஸ் ஆபிஸ் மைல்கல்லை எட்டியுள்ளது.

From Around the web