வசூல் சாதனையில் உச்சம் தொட்ட துரந்தர்... அம்பானி பாராட்டு!
துரந்தர் திரைப்படம்:
பாலிவுட் சினிமாவில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் தான் துரந்தர். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகியது. இந்த திரைப்படத்தில் அக்ஷய் கண்ணா, சஞ்சய்தத், மாதவன், அர்ஜுன் ராம் பால், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இப்படத்தின் இளம் ஹீரோயினாக தெய்வத்திருமகள் பேபி சாரா தான் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி இதுவரை ரூ. 3000 கோடிக்கு மேல் வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது .

அம்பானி வாழ்த்து:
இந்திய சினிமாவில் அதிகபட்ச வசூல் சாதனை ஈட்டிய திரைப்படமாக துரந்தர் திரைப்படம் பார்க்கப்படுகிறது. இப்படியான நேரத்தில் முக்கிய பிரமுகர் ஒருவர் இந்த திரைப்படத்தின் வசூல் குறித்து தெரிவித்திருக்கிறார்.
ஆம் இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரான முகேஷ் அம்பானி துரந்தர் திரைப்படம் மாபெரும் வசூல் ஈட்டியதற்காக பட குழுவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதனால் இந்த திரைப்படம் மீண்டும் தற்போது கவனம் பெற்று இருக்கிறது. துரந்தர் திரைப்படம் இந்திய உளவாளி(ரன்வீர் சிங்) பாகிஸ்தானில் நடத்தும் உளவு வேலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
