துரந்தர் ஹீரோயினுக்கு ஹேப்பி பர்த்டே!.. ’நிலா’ சாரா அர்ஜுனை வாழ்த்தும் ஃபேன்ஸ்!..
தெய்வத் திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை சாரா அர்ஜூன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிறுவயதிலேயே திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர், தற்போது கதாநாயகியாக புதிய பாதையை தொடங்கி தொடர்ந்து முன்னேறி வருகிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சாரா அர்ஜூன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ‘தெய்வத்திருமகள்’ திரைப்படம் தான். நடிகர் விக்ரமின் மகளாக அவர் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நடிப்பு, வயதை மீறிய திறமையாக பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘சைவம்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், குழந்தை நட்சத்திரமாக தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
காலப்போக்கில் வளர்ந்த சாரா, தற்போது கதாநாயகி ரசிகர்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக பாலிவுட்டில் வெளியாகியுள்ள ‘துரந்தர்’ திரைப்படத்தில் முன்னணி நடிகருடன் இணைந்து நடித்தது அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படம் மூலம் நாடு முழுவதும் அவரது பெயர் பேசப்பட்டதுடன், முன்னணி நடிகைகளின் பட்டியலிலும் இடம்பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து வெளியான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சாரா, மீண்டும் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, தெலுங்கு திரையுலகிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ள சாரா அர்ஜூன், ‘யூபோரியா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அதேநேரத்தில், இந்திய சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு படைப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்திலும் சாரா அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இன்று சாரா அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். மேலும், அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். துரந்தர் 3 அறிவிப்பு மட்டும் வந்தால் வேறலெவல் சம்பவம் தான்.
