Connect with us

Cinema News

இந்த விஷயத்துக்கு எப்படியா விக்ரமை ஒத்துக்க வைத்தீர்கள்.!? இது உண்மையில் நிஜம்தானா.?

தமிழ் சினிமாவில் தரமான காதல் கதைகளை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் தற்போது சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர் நடிப்பில் சில படங்கள் கிடப்பில் இருக்கின்றன.

அதில் ஒன்று தான் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் விக்ரம் நடித்துள்ளார். ஏற்கனவே கெளதம் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் சுமார் 3 வருடங்கள் கிடப்பில் இருந்து தான் ரிலீஸ் ஆனது. அதே போன்ற கதைதான் துருவ நட்சத்திரம் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன் – என்ன விஜய் சார் குட்டி கதை ரெடி பண்ணிடீங்களா.?! இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.!

இந்த திரைப்படத்தின் சில பேட்ச் ஒர்க் வேலைகள் கிடப்பில் இருப்பதால், விக்ரம் இந்த படத்திற்கு இன்னும் டப்பிங் பேச மறுத்து வருகிறார் என கூறப்பட்டது. அப்படி, படத்தின் முழு ஷூட்டிங்கையும் முடிக்காமல் டப்பிங் பேசினால், சிம்புவின் AAA, தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா போல படம் ஏனோதானோ என்று எடுத்தது போல இருக்கும் என விக்ரம் மறுத்ததாக கூறப்பட்டது.

ஆனால், அண்மையில் ஒரு செய்தி வெளியானது. அதாவது, விக்ரம், துருவ நட்சத்திரம் படத்திற்கு டப்பிங்  பேச சம்மதித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இது எப்படி சாத்தியம் என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர். எது எப்படியோ ஏற்கனவே சொன்ன அந்த இரண்டு படஙக்ளை போல ரிலீஸ் செய்தால் போதும் என இருந்துவிடாமல்,

படத்தை முழுதாக ரசிகர்கள் ரசிக்கும் படி வேலைகளை முடித்து ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top