Connect with us

Cinema News

மீண்டும் பிறப்பார் செவாலியே சிவாஜி……!!! சொல்கிறார் தமிழ்ப்பட உலகின் பிரபல வசனகர்த்தா

நடிகர் திலகம், செவாலியே என மக்களால் போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். இவரது நடிப்பைப் பாராட்டாத ரசிகர்களே இருக்க முடியாது. சினிமா நட்சத்திரங்களும், திரை உலகமும் இவரது நடிப்பையும், இவரது பண்பையும் இன்றளவும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

தமிழ்த்திரை உலகில் பிரபல சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ். இவர் எம்ஜிஆர், சிவாஜியின் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

அனைத்துமே சூப்பர்ஹிட் படங்களாகத் தான் இருக்கும். நடிகர் திலகத்தைப் பற்றியும் அவரது ஆருயிர் மனைவி கமலா அம்மையாரைப் பற்றியும் இவர் எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்கு…

Aaroordoss

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று…ஆகிய கண்ணதாசன் எழுதிய 2 பாடல்களுக்கும் பொருத்தமானவர் கமலா அம்மையாரும், ஆருயிர் அண்ணன் சிவாஜி அவர்களும் தான். அந்த அளவுக்கு ஒருத்தர் மேல் ஒருத்தர் உயிரையே வைத்திருந்தனர்.

ஒருவரை விட்டு ஒருவர் நீண்டநாள் பிரியாமல் அவர்கள் இயங்கியதும் இல்லை. இயங்கவும் முடியாது. அதனால் தான் அண்ணன் மறைந்து சில ஆண்டுகளுக்குள் கமலா அம்மையாரும் அவரைப் பார்ப்பதற்காக ஆகாயத்தில் பயணமானார்.

1952ம் ஆண்டு கமலா என்ற பேர் கொண்ட தாமரை ஆகிய அம்மையாரின் முகம் பார்த்துத் தான் சூரியனாகிய கணேசன் உதித்து வெளிச்சத்திற்கு வந்தார்.

அம்மையார் சிவாஜி வீட்டிற்கு வந்து விளக்கேற்றிய பிறகு தான் பராசக்தி திரைப்படம் வெளிவந்து அவர் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தது. அம்மையார் புன்னகை புரிய அவருக்குப் புகழ் பொங்கியது. அவர் சிரிக்கச் சிரிக்க சிவாஜிக்கு செல்வம் சேர்ந்தது.

விதம் விதமா வேஷம் போட்டு நடிக்க மட்டுமே தெரிந்து கொண்டு இந்த உலகத்தைப் பற்றியும், நல்லது எது? கெட்டது எது என்பது தெரியாமல் வளர்ந்த சிவாஜி கணேசன் என்கிற சின்னக்குழந்தையை தாயார் ராஜாமணி அம்மையாருக்குப் பிறகு வளர்த்து கண்ணிற்குள்ளே வைத்து காப்பாற்றிய மற்றொரு தாயார் கமலா அம்மையார்.

Pasamalar

பாசமலர் படத்திற்கு நான் வசனம் எழுதியபோது அன்னை இல்லம் சென்று அண்ணனைப் பார்க்கும்பொழுது, இவன் தான் ஆரூரான் என்று அம்மையாரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

அந்த நாள் முதல் என்னுடைய புத்தகங்கள் வெளியீட்டு விழாவிற்கு அம்மையாரை அழைத்த நாள் வரை மணக்க மணக்க தஞ்சாவூர் கைப்பக்குவத்தில் சமைத்து என் பசியாற்றிய பண்பை என்னால் என்றும் மறக்க இயலாது.

கமலா அம்மையாரும் அண்ணன் சிவாஜியும், மீண்டும் அன்னை இல்லத்தில் பேரன், பேத்தி யாருடைய கருவிலாவது உருவாகி வருவார்கள்.

Continue Reading

More in Cinema News

To Top