Categories: Cinema News latest news

முதுகு தண்டுல பிரச்சனைன்னு சொன்னாங்க!.. இப்போ மூளையில பாதிப்பா?.. ஐசியூவில் இருக்கிறாரா அஜித்?

விடாமுயற்சி படத்துக்காக தொடர்ந்து அஜர்பைஜானில் நடிகர் அஜித் படப்பிடிப்பை நடத்தி வந்தார். சமீபத்தில், அந்த இடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்றும் நடிகர் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியதாக லைகா நிறுவனம் அறிவித்தது.

சென்னையில், குடும்பத்துடனும் நண்பர்களை சந்தித்துக் கொண்டிருந்த நடிகர் அஜித் திடீரென நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: சொங்கிப் பாப்பாவான சமந்தா!.. என்ன டிரெஸ் போட்டாலும்!.. மூஞ்சு டல்லடிக்குதே ஏம்மா?..

ஆரம்பத்தில்  ஜெனரல் செக்கப் தான் எனக் கூறினர். பின்னர், நடிகர் அஜித்துக்கு முதுகு தண்டுவட பிரச்சனை என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவது போல தற்போது அஜித் குமாருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மூளையில் இருந்த சிறிய கட்டி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு நீக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவெறும் வதந்தி என்றும் நடிகர் அஜித் குமார் நலமுடன் தான் உள்ளார் என்றும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். சாதாரண செக்கப் அஜித் எத்தனையோ முறை செய்திருப்பார். அதெல்லாம் வெளியே செய்தியாக வரவில்லையே? என்கிற கேள்வியுன் ரசிகர்கள் மனதில் எழுந்து அஜித் பூரண குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: படுத்தேவிட்டானய்யா!.. இனிமே அஜித்தை நம்பி பிரயோஜனம் இல்லை.. லைகாவுல நீங்களும் படம் பண்ணலாமாம்!..

ரசிகர்கள் இன்னும் சில காலத்துக்கு விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை கேட்டு அஜித்தை தொல்லை செய்யாமல் அவருக்கு தேவையான ஓய்வை கொடுக்க வேண்டும் என சினிமா பிரபலங்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Saranya M
Published by
Saranya M