பராசக்தி ஃப்ளாப்!.. அதர்வாவுக்கு இதயம் முரளியாவது கை கொடுக்குமா?.. அப்பா முரளி ஆசி கிடைக்குமா?
இட்லி கடை, பராசக்தி உள்ளிட்ட படங்களை தயாரித்த டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் முதன்முதலில் தயாரித்து இயக்கிய இதயம் முரளி படத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ளார். டிஎன்ஏ, பராசக்தி என வரிசையாக அதர்வா கவனம் பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் நடித்துள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
‘இதயம் முரளி’ திரைப்படத்தை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஒருதலைக் காதலின் உணர்வுகளையும், இளைஞர்களின் மனநிலையையும் மையமாக கொண்டுள்ளது. காதல், உணர்ச்சி, நினைவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இப்படம் இளம் தலைமுறையினரிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். மேலும், தேசிய விருது பெற்ற நடிகர் ஃபஹத் ஃபாசில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக எஸ். தமன் பணியாற்றியுள்ளார். மேலும், இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
‘இதயம் முரளி’ என்ற தலைப்பு, அதர்வாவின் மறைந்த தந்தையும் பிரபல நடிகருமான முரளி நடித்த 1991ஆம் ஆண்டு வெளியான கிளாசிக் திரைப்படமான ‘இதயம்’ படத்தை நினைவூட்டுகிறது. இதனால், இந்த படம் அந்த படத்தின் தொடர்ச்சியா அல்லது மறுஆக்கமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால், படக்குழு இதற்கு விளக்கம் அளித்து, இது முற்றிலும் புதிய மற்றும் அசல் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும், ‘இதயம்’ படத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், ஜூலை 10ஆம் தேதி வெளியாக உள்ள இதயம் முரளி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது. அதர்வாவுக்கு டிஎன்ஏ திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை கொடுத்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை. சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலாவுடன் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்த பராசக்தி படமும் கை விட்டு விட்டது. இந்நிலையில், பல வருட தாமதத்துடன் வெளியாகும் இதயம் முரளி படத்துக்கு அப்பா முரளியின் ஆசி கிடைத்தால் தான் படம் தப்பிக்கும் என்கின்றனர்.
