×

எல்லாரும் Black & White போட்டோ போட்டாங்களே ஒருத்தராவது அர்த்தம் சொன்னாங்களா? ஆண்ட்ரியா தான் கெத்து!

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

 

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே WomenSupportingWomen என்ற ஹேஷ் டேக் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நடிகைகள் ஒருவருக்கு ஒருவர் சேலஞ் செய்து  Black & White போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன்  இதை மற்ற நடிகைகளுக்கும் டேக் செய்து பரிந்துரைத்து வருகின்றனர்.

நம்மில் பலருக்கும் எழும் குழப்பம் என்னவெனில், இந்த சேலஞ் எதற்கு? எதற்காக இப்படி  Black & White போட்டோக்களை பதிவிடுகிறார்கள் என்று யோசித்திருந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில் இதற்கு பதில் அளித்துள்ளார். அந்த பதிவில், "பெண்களுக்கு ஆதரவாக பெண்கள் இருக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிறுத்தவும், பெண்களை சமமாக நடத்தவும் தான் இந்த சேலஞ்ஜின் நோக்கம் என கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News