×

அவருக்கு நான் சம்பளம் கொடுக்கவில்லையா? - கார் ஓட்டுனர் மீது கவர்ச்சி நடிகை புகார்

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி நடிகையாகவும், கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடுபவராகவும் நடித்து பிரபலமானவர் முமைத்கான். இவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். இந்நிலையில் இவர் மேல் கார் டிரைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் ’மூன்று நாள் ட்ரிப் என சொல்லி என் காரை கோவாவுக்கு வாடகைக்கு எடுத்து சென்றார். ஆனால் அங்கு அவர் 8 நாட்கள் தங்கினார். அதனால் 5 நாள் வாடகை எனக்கு அதிகமானது. அதில்  15,000 ரூபாயை தராமல் என்னை ஏமாற்றி வருகிறார்.’ எனப் புகார் கூறியுள்ளார்.

இந்நிலையில், அந்த கார் ஓட்டுனர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள முமைத்கான் அவருக்கு நான் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டேன். என் மீது அவதூறாக புகார் கொடுத்துள்ளார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அந்த கார் ஓட்டுனர் தனது சங்கத்தை நாடியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News