×

பிக்பாஸ் போட்டியை தடை செய்ய சொன்னாரா ஓவியா? பதறியடித்து விளக்கம்!

பிக்பாஸ் போட்டியை தடை செய்ய வேண்டுமா எனக் கேட்டிருந்த ஓவியா இப்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

 

பிக்பாஸ் போட்டியை தடை செய்ய வேண்டுமா எனக் கேட்டிருந்த ஓவியா இப்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ஓவியா சினிமாவில் நடித்து பிரபலமானதை விட நூறு மடங்கு அதிக பிரபல்யம் சினிமாவின் மூலம் கிடைத்தது. ஆனால் அதைப் பயன்படுத்தி அவர் சரியான பாதையில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் தனது டிவிட்டரில் ‘பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யலாமா?... அவர்கள் குறைந்தபட்ச கருணையுடனாவது போட்டியாளர்களிடம் நடந்துகொள்ள வேண்டும்’ எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.

இதையடுத்து இப்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவிட்ட இரண்டு டிவீட்களில் ‘நான் நிகழ்ச்சியைத் தடை செய்ய சொல்லவில்லை. அவர்கள் குறைந்தபட்ச கருணையுடனாவது நடந்துகொள்ள வேண்டும் என்றே கருதுகிறேன். நான் இன்னொரு சுஷாந்தை தமிழ்நாட்டில் பார்க்க விரும்பவில்லை. விடுங்க.. என் தவறுதான்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News