×

மெடிக்கல் எமர்ஜென்ஸி எனப் பொய் சொல்லி பாஸ் எடுத்தாரா ரஜினி? சமூகவலைதளங்களில் வெளியான புகைப்படம்!

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ அவசரம் என பொய் சொல்லி தனது கேள்மபாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்றதாக இணையத்தில் புகார்கள் எழுந்துள்ளன.

 

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ அவசரம் என பொய் சொல்லி தனது கேள்மபாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்றதாக இணையத்தில் புகார்கள் எழுந்துள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் தனது கேள்ம்பாக்கம் பண்ணை வீட்டில் தற்போது வசித்து வருகிறார். கொரொனா அச்சம் காரணமாகவே அவர் அங்கு தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அங்கே தனது மருமகன் புதிதாக வாங்கியுள்ள லம்போர்கினி காரை ஓட்டியபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் அவர் கேளம்பாக்கம் செல்ல -பாஸ் எடுத்தாரா என்ற கேள்வி எழுந்தது. ரஜினி -பாஸ் பெற்றாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அது சம்மந்தமாக புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் அதில் ஈ பாஸ் க்கான காரணமாக மருத்துவ அவசரம் எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மருத்துவ அவசரம் எனப் பொய் சொல்லி பண்ணை வீட்டில் கார் ஓட்டிக்கொண்டு இருக்கிறாரா என இணையத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News