×

பிக்பாஸ் வீட்டில் போன் பயன்படுத்தினாரா ரியோ... போட்டோவால் வெடித்த சர்ச்சை

பிக்பாஸ் வீட்டில் ரியோ செல்போன் பயன்படுத்தியதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸின் 4-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆரி , ரம்யா, சோம்,கேபி, ரம்யா மற்றும் ரியோ என ஆறு பேரில் வெற்றியாளர் யார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

பொங்கல் கொண்டாட்டத்தை ஒட்டி எவிக்டான போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். நூறு நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ், இந்த வார இறுதியுடன் முடிவுக்கு வர இருக்கிறது. 


இந்தநிலையில், நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பிக்பாஸின் ஸ்வீட் நினைவுகள் அடங்கிய படம் வெளியிடப்பட்டது. அதில் ஒரு காட்சியில் ரியோ கையில் மொபைல் இருப்பது போல ஒரு காட்சி இடம் பெற்று இருக்கிறது. அதேபோல் சிலர் கூறுகையில் அது மொபைல் போன் இல்லை. மைக்கின் பேட்டரி. வேலை செய்கிறதா என்பது போல காதில் வைத்து கேட்கிறார் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர். சில நாட்கள் முன்னர், சோம சேகரும் திருட்டுத்தனமாக எதோ செய்ததும், அது மொபைலாக தான் இருக்கும் என நெட்டிசன்கள் ட்வீட்டியது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News